Tuesday, December 3, 2013


ஹைக்கூ



எதிர்பார்ப்பு

என்னவர்களே !!!

நான் இறந்த பின்பு என்னுடைய

கல்லறைக்கு மலர் தூவி வையுங்கள்,

என்னால் நேசிக்கபட்டவள் என்றாவது

என்னை நேசித்து வரக்கூடும்.........


கடவுள்

சித்தர்களால் சிந்திக்க முடியாமலும்

புத்தர்களால் வர்ணிக்க முடியாமலும்

உள்ள ஓர் உருவம்

சிற்பியால் செதுக்கப்படுகிறது !!


கவிதை

பொய்யான மெய் கற்பனை

மெய்யான கற்பனை கவிதை.....


மரணம்

யாவகை வாக்கியம் ஆனாலும்

இறுதியில் முற்றுப்புள்ளி உண்டு.


வெட்கம்

காதலை வெளிப்படுத்த பெண்களுக்கே

உரித்தான ஒரு மொழி,

தற்போது ()றைந்துபோனது !!!!!!

             
 மௌனம்

ஆதாம் ஏவாள் காலத்து

காதல் மொழி,

இன்று விரதமாகிவிட்டது !!



நவீன காதலி

களவும் கற்று மறந்துவிட்டு ,

காதலனின் சில்லறையில் !?


தியாகம்

கொலை செய்யப்பட்ட நண்பனின்

கையில் அட்சதை பூக்கள் !!!


மறைமுகம்

மேகத்தில் மறைந்துவிட்ட சூரியருக்கு

நிலவிடத்தில் காதல் ஆனால்

பூமியை முத்தமிட்டது மழை !!!



அரசியல்

லஞ்சத்தின் மாயவலை விளையாட்டு,

நாலு கால்களில் அமர

இரண்டு கால்களின் தந்திரம்.....





நினைவு

அவள் கெஞ்சல்களின் பெட்டகம்

தற்போது என் செயற்கை கனவில் மட்டும் !!

                        
நட்பு

"ந"ம்பிக்கை-க்கும்

"பு"ன்னகை-க்கும்

நடுவில் உள்ள உறவு......



தோல்வி

எட்டி விட முடியாமல் போன வெற்றியை,

தொட்டு விட துடிக்கும் மரணவலி.





கலியுகக் காதல்

வெள்ளைத் தோலுக்கு ஆசைப்படும் மானிடர்களும்

வெள்ளிக்காசுக்கு ஆசைப்படும் மங்கைகளும்

கொஞ்ச நாட்கள் கொஞ்சிப்  பழகும் உறவு 



காதல் தோல்வி

அவள் பாத சுவடுகள் புதைந்துவிட்ட

பாதையை நோக்கி போகிறது ,

அவளது கண்முன் கோழையாகிவிட்ட

என் காதல்.........



போதனை

சொர்க்கம் என்னவென்று என் ஆசானிடம் கேட்டேன் ?

"தெருவெல்லாம் தேவதைகள் பன்னீர் தூவி உன் ஆசைகளை 

நிறைவேத்துவர்",

அப்போது நரகம் என்றால் ?

"அதே தேவதைகள் கண்ணடித்து காதல் செய்து உன் ஆசைகளை 

அடக்கம் செய்வர்" என்றார்.


குறள் எண் 1331

"காதலை காசாக்கி காதலனை லூசாக்கி

கண்டவனை கைபிடிப்பாள் கன்னி"

வைகறை மேகமாய்


இலக்கணம்  கூட தோற்றுப்போகும்

உமது  நட்பில்,

புது இலக்கியம் கூட உருவாகும்

நமது உறவில்…..



எனது மகிழ்ச்சியில் என்றும் நீயும்

ஒரு பாத்திரமாய்,

எனது சோகத்தில் உன் ஆறுதல்கள்

இன்றும் பத்திரமாய்….



என் கல்லூரி ஆண்டுகள் உன்னுடன்

கழிந்தன நாட்களாய்,

என் கல்லூரி கனவுகள் உன்னுடன்

மலர்தன மல்லிகையாய்…..



நிலவு கூட விடியலுக்கு விடை கொடுக்க

இயலும் ஆனால்

என்னால் உனக்கு விடை

கொடுக்க இயலாது…..



நண்பா ! என்றும் வானுலகில்

வைகறை மேகமாய் நீ,

உன்னை தொடர்ந்து வரும்

ஈரக்காற்றை நான்....
பெண்ணே !


காதலுக்கு  கண்கள் இல்லை

ஆனால் தன்  கண்மணியை  பார்த்தால்  மட்டும்

அது மௌனமாய் தூது பேசும்....



காதலுக்கு காலநேரம்  இல்லை

ஆனால் தன் உடையவளுக்காக நாள் கணக்கில்

நின்ற இடத்திலேயே சுகம் காணும்....



காதலுக்கு தூக்கம்  இல்லை

ஆனால் தன் தேவதையுடன் கனவு காண

கற்பனைகளை தட்டி தாலாட்டு பாடும்....



காதலுக்கு பேதம்  இல்லை

ஆனால் தன் இனியவள் பேசிய வார்த்தைகளை

கோர்த்து  கவிதைகளாய் வடிக்க  தோணும்....



காதலுக்கு திசைகள் இல்லை

ஆனால் தன் இளவரசி இருக்கும் இடத்தில்

குடிசை போட்டு வாழ தூண்டும்....



காதல் ஒன்றும் கடவுள் இல்லை

ஆனால் தன் காதலியின் மனதில் தான் இருப்பது தெரிந்தால்

உயிர் இல்லாமல் வாழும் தேகம்  !!.....


                                        -- கார்த்திக்

திரைகடல் ஓடியும்

உருவமில்லாத உயிருக்காக தன் மனதில்

உளிக்கொண்டு செதுக்கியவள் அவள்,

கருவுற்ற அப்பெண்ணின் எண்ணங்களில்

கனவுகளுக்கு பஞ்சமில்லை….



சிற்சில ஆசைகளும் கூட நிறைவேற

துடிக்கும் அவள் பிள்ளைக்காக,

தவத்தில் சிப்பியை விட குறைவுதான்

ஆனால் முத்துவிற்கு விலையில்லை….



மறைமுகமாய் வாழும் அக்குழந்தைக்கு

பத்துமாத வளர்சிறை,

பச்சிளம் பிஞ்சிற்கு தாலாட்டு

வளையல் ஓசைக்கு இணையில்லை…..



கனவு தாயின் ஒவ்வொரு கணமும்

சுமையை தாங்கும் இன்பவலி,

நாட்கள் திங்களாய் விடிந்ததும்

வெளியேறுவதில் தடையில்லை……



திரைகடல் ஓடியும் கிடைக்காத அன்பு

பிள்ளை பிறவிப்பயன் பெற்றதும்,

தாயின் முதல் ஸ்பரிசத்தில்….
காதலன்



கண்டுகிட்டேன் காதலியே மிகவும் தாமதமாக

உன் இதயத்தில் நான் இல்லை என்று


புன்னகை பூக்க மறந்த நாட்களிலும் உன் செவ்விதழ்களின்

ஸ்பரிசத்தில் கூடு கட்டி வாழ்ந்தேனே,

தேனை தீண்டாத வண்டு என்று


வாழ்கையை தேடும் வயதில் தினம் உன்னை தேடினேனே, 

உன் கண் ஈர்ப்பு  விசையில் என்னை

உன்னிடம் தொலைத்தேனே என்று



திகட்டாத உன் மொழினலே உன்னை தத்தெடுத்து

கொண்டேனே, என் இதய ஆசனத்தில்

முடிசூட்டும் மகாராணி நீ என்று



நேற்று நீ கொடுத்த பத்திரிகையின் விளிம்பில்

மஞ்சளும் என்னை பார்த்து சிரித்தது,

நீயும் சாதாரண காதலன்தான் என்று



இன்று தொலைத்து போன என் இதயம் திரும்ப கிடைத்தது,

இந்த இடைகால விடுமுறையில் கண்டவை 

எல்லாம் ஏமாற்றமே என்று



நாளை நான் உன்னை மறக்க நினைத்தாலும்,

தெளிவாக புரிந்து போனது,

அது என் இதயம் சாகும் வரை முடியாது என்று



கண்டுகிட்டேன் காதலியே மிகவும் தாமதமாக

உன் இதயத்தில் நான் இல்லை என்று.